வியாழன், 20 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 மே 2025 (09:24 IST)

இந்தியாவில் ஆயிரத்தைத் தொட்ட கொரோனா பாதிப்புகள்! சுகாதாரத்துறைக்கு அதிரடி உத்தரவு!

இந்தியாவில் ஆயிரத்தைத் தொட்ட கொரோனா பாதிப்புகள்! சுகாதாரத்துறைக்கு அதிரடி உத்தரவு!

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

2020ல் உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர்பலியை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட் தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பரவிய இந்த கோவிட் தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டு வருகிறது.

 

நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 1,009 பேருக்கு கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கேரளாவில் 430 பேருக்கு கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 96 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்திய அளவில் இதுவரை 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். என்றாலும், இது தீவிரமாக பரவக் கூடிய கோவிட் தொற்று இல்லை என்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்படும்படி மாநில சுகாதார துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்களை மாஸ்க் அணிய வலியுறுத்தும்படியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்கவும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவுறுத்தியுள்ளார்.

 

Edit by Prasanth.K