வியாழன், 4 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 ஜூலை 2025 (18:24 IST)

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!
மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர்களின் உடல்நிலையை கவனிக்க 30 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்ற சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
பெற்றோர்களை கவனிக்க அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க ஏதேனும் வழிமுறை உள்ளதா என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கமளித்தார். அவர் கூறுகையில், "மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு, 20 நாட்கள் அரைச் சம்பள விடுப்பு, 8 நாட்கள் தற்செயல் விடுமுறை மற்றும் 2 நாட்கள் கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை ஆகியவை அனுமதிக்கப்படுகின்றன" என்றார்.
 
மேலும், இந்த 30 நாட்கள் விடுப்புகளை முதிய பெற்றோர்களை கவனித்துக்கொள்வது உட்பட எந்தவொரு தனிப்பட்ட காரணத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். குடும்ப பொறுப்புகளைக்கவனித்துக்கொள்ளும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இது ஒரு தெளிவான வழிகாட்டுதல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
மத்திய அரசு வழங்கும் ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுமுறையை, பெற்றோர்களின் உடல்நிலை சரியில்லாத காலங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற இந்த அறிவிப்பு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
 
Edited by Mahendran