செவ்வாய், 9 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 செப்டம்பர் 2025 (15:27 IST)

குடியரசு துணை தலைவர் தேர்தலை புறக்கணிக்கிறோம்: 7 எம்பி வைத்துள்ள கட்சி அறிவிப்பு..!

குடியரசு துணை தலைவர் தேர்தலை புறக்கணிக்கிறோம்: 7 எம்பி வைத்துள்ள கட்சி அறிவிப்பு..!
நாளை நடைபெறவிருக்கும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை, ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம் கட்சி புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு 7 எம்.பி.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி என இரு கூட்டணிகளிடமிருந்தும் சமமான தூரத்தை கடைப்பிடிப்பதே தங்களது நிலைப்பாடு என அக்கட்சி தெரிவித்துள்ளது.
 
ஒடிசாவின் வளர்ச்சி மற்றும் நலனில் மட்டுமே கவனம் செலுத்துவது தங்களுக்கு முக்கியம் என பிஜு ஜனதா தள எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த முடிவு, ஒடிசா அரசியல் களத்தில் பிஜு ஜனதா தளத்தின் தனிப்பட்ட நிலைப்பாட்டையும், எந்த கூட்டணிக்கும் ஆதரவளிக்காத அதன் தற்போதைய கொள்கையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
 
Edited by Mahendran