திங்கள், 8 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (16:29 IST)

நாளை மறுநாள் சந்திர கிரகணம்.. 82 நிமிடங்கள் தெரியும்.. வெறும் கண்ணால் பார்க்கலாமா?

நாளை மறுநாள் சந்திர கிரகணம்.. 82 நிமிடங்கள் தெரியும்.. வெறும் கண்ணால் பார்க்கலாமா?
செப்டம்பர் 7ஆம் தேதி, வானில் அரிய வகை முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் 82 நிமிடங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கிரகணம், சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் ஏற்படுகிறது.
 
இந்த நிகழ்வின் போது, சந்திரன் அடர் சிவப்பு நிறத்தில் தோன்றும். செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இது நள்ளிரவு 12.23 வரை நீடிக்கும். இந்த முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். வானம் தெளிவாக இருந்தால், இந்த அரிய நிகழ்வை பொதுமக்கள் முழுமையாக கண்டு ரசிக்கலாம்.
 
இந்த சந்திர கிரகணத்தை ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் காணலாம். உலக மக்கள் தொகையில் சுமார் 87% பேர் இந்த வானியல் நிகழ்வின் ஒரு பகுதியையாவது பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இது சமீப காலங்களில் காணப்படும் மிக நீண்ட சந்திர கிரகணங்களில் ஒன்றாகும்.
 
Edited by Siva