வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2024 (11:32 IST)

அனைவருக்கும் 5ஜி திட்டம்! Redmi அறிமுகம் செய்யும் இந்தியாவின் விலை மலிவான 5ஜி ஸ்மார்ட்போன்!

Redmi A4

பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனமான ஷாவ்மி (Xiaomi) தனது விலை மலிவான 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

 

 

இந்தியா முழுவதும் 5ஜி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பலரும் 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்க தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கேற்ப பட்ஜெட் விலையில் தொடங்கி அதிக விலை வரை பல்வேறு நிறுவனங்களின் 5ஜி ஸ்மார்ட்போன்கள் சந்தையில் விற்பனையாகி வருகின்றன.

 

ஷாவ்மி நிறுவனமும் தனது ரெட்மி ப்ராண்டில் பல 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை முன்னதாக வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அனைவருக்கும் 5ஜி என்ற திட்டத்தின் படி அனைவரும் வாங்குவதற்கு வசதியாக விலை குறைந்த 5ஜி ஸ்மார்ட்போனை ரெட்மி அறிமுகம் செய்கிறது. 
 

 

அதன்படி Redmi A4 என்ற புதிய மாடலை ரெட்மி அறிவித்துள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் ரூ.10 ஆயிரத்திற்குள் அறிமுகமாகும் என ரெட்மியின் இந்தியா தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ராகன் 4எஸ் ஜென் 2 சிப் பயன்படுத்தப்பட உள்ளது. கேமரா, ரேம், மெமரி என பொதுவான கவரும் அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதிக்கும் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K