வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (13:13 IST)

மேலும் ஒரு நடிகைக்கு பாலியல் தொல்லை.. நடிகர் ஜெயசூர்யா மீது 2வது வழக்குப்பதிவு.!

Jayasuriya
மேலும் ஒரு நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நடிகை ஒருவர், இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள திரைப்பட தளத்தில், ஜெயசூர்யா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, படப்பிடிப்பில் கழிவறையை விட்டு வெளியேறியபோது நடிகையை ஜெயசூர்யா பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் 2013ல் நடந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த புகாரை பெற்று கொண்ட திருவாடானை போலீசார், பதிவு செய்த வழக்கு தொடுபுழா போலீசாரிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என்றும், கேரள போலீஸ் அகாடமி உதவி இயக்குனர் ஐஸ்வர்யா டோங்ரே ஐபிஎஸ் தலைமையிலான குழு இந்த வழக்கை விசாரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நடிகர் ஜெயசூர்யா மீது 2வது வழக்குப்பதிவு ஆகும்.

 
ஏற்கனவே, கொச்சியைச் சேர்ந்த நடிகை ஒருவரின் புகாரின் அடிப்படையில், திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீஸார் அதே பிரிவுகளின் கீழ், கடந்த புதன்கிழமை ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளைப் பதிவு செய்தனர்.