திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2024 (09:39 IST)

ராமர் கோவில் திறப்பு விழாவால் நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய நிலை என்ன?

share
நேற்று ராமர் கோவில் திறப்பு விழா காரணமாக பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பங்குச்சந்தை ஆரம்பமே அமோகமாக உள்ளது என்பதும் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 508 புள்ளிகள் உயர்ந்து 71 ஆயிரத்து 950 என்ற புள்ளிகளில் வர்த்தகம் வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 150 புள்ளிகள் உயர்ந்து 21,720 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.  இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் முதலீட்டாளர்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva