நேற்றைய உச்சத்திற்கு பின் இன்னும் மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. மதியத்திற்கு மேல் உயருமா?
பங்குச்சந்தை நேற்று 1200 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து உச்சத்தில் இருந்த நிலையில், இன்று பங்குச்சந்தை சரிந்து வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், மதியத்திற்கு மேல் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சற்று முன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், 265 புள்ளிகள் சரிந்து 82263 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 58 புள்ளிகள் குறைந்து 25003 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், ஐடிசி, மாருதி, டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
அதே நேரத்தில், டெக் மகேந்திரா, டி.சி.எஸ்., டைட்டான், சன் பார்மா, கோடக் மகேந்திரா வங்கி, இன்ஃபோசிஸ், இன்டஸ் இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்.டிஎஃப்சி வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Edited by Siva