புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : புதன், 20 மார்ச் 2024 (09:12 IST)

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு..? கூட்டணி கட்சிகளுடன் இன்று தொகுதி பங்கீடு..?

dmdk admk
மக்களவை தேர்தலை ஒட்டி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில் திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டை முடித்து வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. திமுக இன்று வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. காங்கிரஸ் நாளை மறுநாள் வேட்பாளர்களை அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் அதிமுக தனது கூட்டணி பேச்சுவார்த்தையை இன்று நிறைவு செய்ய உள்ளதாகவும், அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.  புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க உள்ளது. தேமுதிகவிற்கான தொகுதிகளை அதிமுக ஏற்கனவே கூறிவிட்டது. ஆனால் தேமுதிக இன்னமும் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. 


இதனிடையே தேமுதிகவுடன் அதிமுக இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு கிருஷ்ணகிரி, வேலூர், விருதுநகர் கள்ளக்குறிச்சி தவிர மேலும் ஒரு தொகுதி இருக்க வாய்ப்புள்ளது. தேமுதிக தனது நிலைப்பாட்டை நாளை அறிவிப்பதாக கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.