1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 மே 2025 (12:04 IST)

வெளியான ஒரு வாரத்தில் ஜோரான விற்பனை! கவரும் Motorola Razr 60 Ultra சிறப்பம்சங்கள்!

Motorola Razr 60 Ultra

பிரபலமான மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஃப்ளிப் மாடலான Motorola Razr 60 Ultra வெளியான ஒரு வாரத்தில் நல்ல விற்பனையையும், ரிவ்யூக்களையும் பெற்றுள்ளது.

 

இந்தியா முழுவதும் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. மக்கள் பலரும் லக்ஸரியான ஃபோன்களை வாங்க விரும்பும் நிலையில் ஃப்ளிப் மாடல் போன்கள் சமீபமாக கவனம் பெற்றுள்ளன. சாம்சங், மோட்டோரோலா உள்ளிட்ட பல நிறுவனங்களும் ஃப்ளிப் மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

 

அந்த வகையில் மோட்டோரோலா நிறுவனம் Motorola Razr 40 மற்றும் 50 மாடல்களை தொடர்ந்து புதிய Motorola Razr 60 Ultra மாடலை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. Moto AI வசதியுடன் முதல்முறையாக அல்காண்ட்ரா வுட் பினிஷில் வெளியாகியுள்ள இந்த மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

Motorola Razr 60 Ultra சிறப்பம்சங்கள்:

 
  • 6.69 inch LTPO AMOLED டிஸ்ப்ளே
  • 4.0 pOLED எக்ஸ்டெர்னல் டிஸ்ப்ளே
  • மடிக்கக்கூடிய டால்பி விஷனுடன் கூடிய டூவல் டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 எலைட் சிப்செட்
  • 4.35 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ப்ராசஸர்
  • 16 ஜிபி ரேம் 
  • 512 ஜிபி இன்பில்ட் மெமரி
  • 50 எம்பி + 50 எம்பி டூவல் ப்ரைமரி கேமரா
  • 50 எம்பி முன்பக்க செல்பி கேமரா
  • ப்ளூடூத் 5.4, யூஎஸ்பி டைப் சி, என் எஃப் சி வசதி
  • 4700 mAh பேட்டரி, 68W பாஸ்ட் சார்ஜிங்
  • 30W வயர்லஸ் சார்ஜிங், 5W ரிவர்ஸ் சார்ஜிங்
 

இந்த Motorola Razr 60 Ultra ஸ்மார்ட்போன் Rio Red, Mountain Trail, Scarab ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.99,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K