வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (14:43 IST)

இந்தியாவில் வெளியானது Google Pixel 10! - சிறப்பம்சங்கள் விலை நிலவரம்!

Google Pixel 10

இந்தியாவில் வெளியாகியுள்ள பிரபலமான கூகிள் நிறுவனத்தின் Google Pixel 10 பல்வேறு ப்ரத்யேக சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

 

கூகிள் நிறுவனத்தின் பிக்ஸல் மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதுமே குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்களும், வரவேற்பும் இருந்து வருகிறது. இந்நிலையில் நீண்ட காலமாக அறிவிப்பில் இருந்த Google Pixel 10 ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது கூகிள்.

 

இந்த Google Pixel 10 ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் Actua OLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. மேலும் Google Tensor G5 சிப்செட், Titan M2 Security Co ப்ராஸசர் என மற்ற ஸ்மார்ட்போன்களில் இல்லாத சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.

 

கேமராவை பொறுத்தவரை பின்பக்கம் ட்ரிப்பிள் கேமரா. 48 எம்பி மெயின், 13 எம்பி அல்ட்ரா வைட் மற்றும் 10.8 எம்பி டெலிபோட்டோ கேமராக்களை கொண்டுள்ளது. முன்பக்க கேமரா 10.5 எம்பி தரத்துடன் அளிக்கப்பட்டிருக்கிறது.

 

இந்த Google Pixel 10 ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இண்டெர்னல் மெமரி வசதியுடன் வெளியாகியுள்ளது. 24 மணி நேரத்திற்கு சார்ஜ் தாங்கும் வகையில் 4,970 mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்துடன் வெளியாகும் Google Pixel 10 அடுத்த 7 ஆண்டுகளுக்கான சாப்ஃட்வேர் அப்டேட்களையும் வழங்குகிறது.

 

இதன் விலை ரூ.79,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கி நடந்து வருகிறது.

 

Edit by Prasanth.K