வியாழன், 12 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 ஜூலை 2021 (00:01 IST)

பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்?

நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவர்கள் அதிகாரமிக்க பதவியில் அமர்வார்கள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். நெற்றியில் வலது பக்கம் இருந்தால் வறுமை இருந்தாலும் நேர்மையுடன் வாழ்வார்கள். 
 
இடது தாடையில் மச்சம் இவர்கள் பார்ப்பதற்கு வசீகரமான தோற்றத்துடன் அழகாக இருப்பார்கள். ஆண்கள் இவர்களைத் விரட்டி காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணடையவர்களாக இருப்பார்கள். வலது தாடையில் மச்சம் இருந்தால் பிறரால் வெறுக்கப்படுவார்கள். 
 
 
 
கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றம், இறக்கம் நிறைந்ததாக இருக்கும். 
 
காதுகளின் மச்சம் இருந்தால் செலவு செய்வதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணம் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும். 
 
நாக்கில் மச்சம் உள்ள பெண்கள் கலை ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள். ரசனைகள் அதிகமாக இருக்கும். 
 
முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும்.  உடலில் ஆரோக்கியம் திகழும். 
 
தொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷ்டப்பட்டு வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வருவார்கள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித்தனமும் இருக்கும். 
 
இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண்கள், புத்தி கூர்மையானவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள். அதுவே  வலது முழங்காலில் என்றால் பிடிவாதக்கார்களாக இருப்பார்கள். 
 
பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம்.
 
தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணம் நிறைய இருக்கும். வாழ்க்கையில் மன நிறைவு  இருக்காது.
 
மூக்கு மீது மச்சம் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.
 
தொப்புல்களுக்கு மேலே மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.
 
பிறப்புறுப்பில் மச்சம்: இங்கு மசம் இருக்கும் பெண்களைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி  வரும்.
 
உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டுகளில் மச்சம் இருந்தால் இவர்களது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண்களாக இருப்பார்கள். சிறந்த நிர்வாகியாகவும் இருப்பார்கள். 
 
கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகரமாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம்  என்றால் வறுமை வாட்டும்.