வெள்ளி, 17 அக்டோபர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 17 செப்டம்பர் 2025 (18:59 IST)

செப்டம்பர் 21ஆம் தேதி சூரிய கிரகணம்.. கன்னி ராசிக்காரர்களுக்கு ஆபத்தா?

செப்டம்பர் 21ஆம் தேதி சூரிய கிரகணம்.. கன்னி ராசிக்காரர்களுக்கு ஆபத்தா?
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது ஏற்படும் சூரிய கிரகணம், வருகிற 21-ஆம் தேதி நிகழ்கிறது. இந்த கிரகணம் கன்னி ராசியில் நிகழ உள்ளதால், கன்னி ராசிக்காரர்களின் வாழ்வில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். கன்னி ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தின்போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பதை இப்போது பார்ப்போம்.
 
சூரிய கிரகணம்,  காலகட்டத்தில், உடல்நலம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, சரியான சுய பராமரிப்பு, போதுமான ஓய்வு, யோகா மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.
 
சூரிய கிரகணத்தின்போது, முதலீடு செய்தல், திருமண பேச்சுவார்த்தைகள் போன்ற பெரிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். இது எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
 
ஜோதிடர்களின் கூற்றுப்படி, சூரிய கிரகணத்தின்போது ஆழ்ந்த ஆன்மீக சக்தி வெளிப்படும். இந்த நேரத்தில், மனதை ஒருமுகப்படுத்தித் தியானத்தில் ஈடுபடுவது, ஆன்மீக அறிவையும் தெளிவையும் அதிகரிக்கும். இது, எதிர்காலத்திற்கான நல்ல வழியைக் காட்டும்.
 
Edited by Mahendran