1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: சனி, 26 ஜூலை 2025 (17:30 IST)

கடவுளுக்காக தினசரி ஒரே ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்.. குழந்தைகளுக்கு பூஜையை கற்று கொடுங்கள்..!

இறை வழிபாடு ஆடம்பரமல்ல, தூய பக்தியே முக்கியம். கற்பூர தீபம் ஏற்றி, மனதார இறைவனை வேண்டி, குற்றங்குறைகளை மன்னித்து ஏற்றுக்கொள்ளுமாறு சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் கண்ணை மூடி தியானிக்கலாம்.
 
பூ, சூடம் இல்லையெனில் கவலை வேண்டாம். ஒரு விளக்கேற்றி, பால், பழம் போன்ற எளிமையான நைவேத்தியங்களை வைத்து வழிபட்டால் போதும். இறைவன் நிச்சயம் ஏற்றுக்கொண்டு வளம் சேர்ப்பார்.
 
கடவுளுக்காக ஒவ்வொரு நாளும் ஒரு நிமிடம் செலவழித்து வாழ்ந்தால், என்றென்றும் இன்பங்களை அடையலாம். உங்கள் அன்றாட பூஜையை வீட்டில் வளரும் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து, அவர்களை நல்ல வழியில் கூட்டிச் செல்லுங்கள். இது அவர்களுக்கு ஆன்மீகப் பிணைப்பை உருவாக்கி, நல்லொழுக்கத்துடன் வாழ உதவும்.
 
கற்பூர தீபம் காட்டினேன், ஏற்றுக்கொள்வாய் இறைவா!" என்று மனதார வேண்டி கொண்டால் நல்லது நடக்கும்.
 
 
Edited by Mahendran