வெள்ளி, 28 நவம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 அக்டோபர் 2025 (17:00 IST)

பிரம்மன் தீர்மானித்த அற்புத இடம்: சென்னை ஆலயத்தில் சரஸ்வதிக்கு தனி சந்நிதி

பிரம்மன் தீர்மானித்த அற்புத இடம்: சென்னை ஆலயத்தில் சரஸ்வதிக்கு தனி சந்நிதி
சென்னை பெசன்ட் நகர் ஸ்ரீவரசித்தி வல்லப விநாயகர் ஆலயத்தில் சரஸ்வதி தேவிக்காக பிரத்தியேகமாக ஒரு தனிச் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. சிருங்கேரி சாரதா பீட மகாசுவாமிகளின் வழிகாட்டுதல்படி, முதலில் வராஹி சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்ட இடத்தில், பின்னர் சரஸ்வதி சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது.
 
சிலை அமைக்கும் பணியின்போது, அந்த இடத்தின் மேற்கூரையை பிரித்தபோது ஒரு ஆச்சரியம் காத்திருந்தது: அங்கு இரண்டு குதிரைகள் பூட்டிய தேரை பிரம்மா ஓட்டுவது போன்ற சிற்பம் இருந்தது கண்டறியப்பட்டது.
 
"தன் மனைவி சரஸ்வதி தேவியின் சிலை, தனக்குக் கீழே அமைய வேண்டும் என்று பிரம்மதேவனே முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது" என்று ஆலய அறங்காவலர்கள் மெய்சிலிர்ப்புடன் தெரிவித்தனர்.
 
வீணை, ஜபமாலை, புத்தகத்துடன் அமர்ந்த நிலையில், கருணை பொங்கும் முகத்துடன் கூடிய சரஸ்வதி தேவியின் சிலை பத்து மாதங்களில் தயாராகிப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கல்வி மற்றும் கலைகளில் சிறக்க விரும்பும் மாணவர்கள் இங்கு வந்து வணங்கி செல்லலாம்.
 
Edited by Mahendran