வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?
வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் தினமும் எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்றும் சர்க்கரை நோயே இல்லாத நிலை ஏற்படும் என்றும் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டுள்ள நிலையில் இது குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பது என்ன என்பதை பார்ப்போம்.
கருஞ்சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்வதால் சர்க்கரையின் பாதிப்பு சிறிது குறையலாம். ஆனால் இவை இரண்டுமே சர்க்கரையை கட்டுப்படுத்தி விடும் என்று நினைக்க கூடாது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தகுந்த சிகிச்சையை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். அதோடு வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை எடுத்துக் கொண்டால் சர்க்கரை கட்டுப்பட வாய்ப்பு உண்டு.
வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சர்க்கரை நோய் முழுவதும் குணமாகிவிடும் என்று நினைப்பது தவறானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்க்கரை நோய்க்கு தேவையான சித்த மருந்துகளோ அல்லது ஆங்கில மருந்துகளோ எடுத்துக்கொண்டு அவற்றோடு வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தையும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பாக வெந்தயம் கருஞ்சீரகம், ஓமம் அரைத்த பொடியை கொதிக்க வைத்து தேநீர் போல் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி சர்க்கரை நோய்க்கு தகுந்த மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது
Edited by Mahendran