1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 22 மே 2025 (10:11 IST)

மீண்டும் பயங்கர சரிவை நோக்கி பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

பங்குச் சந்தை இந்த வாரம் முழுவதுமே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் ஏற்றம் இருந்தது என்பதையும், செவ்வாய்க்கிழமை திடீரென சரிவடைந்ததைப் பார்த்தும் இருக்கிறோம்.
 
இந்த நிலையில், இன்று வியாழக்கிழமை சந்தை மீண்டும் பயங்கரமாக சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் இன்று 700 புள்ளிகள் சரிந்து, 80,904 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 210 புள்ளிகள் சரிந்து, 24,590 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் பாரதி ஏர்டெல், இன்டஸ் இண்ட் வங்கி மற்றும் ஜியோ பைனான்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளன. மற்ற அனைத்து பங்குகளும் சரிவில் தான் வர்த்தகம் ஆகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva