திங்கள், 16 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 8 நவம்பர் 2023 (13:47 IST)

உலகக் கோப்பை 2023: ஆஸ்திரேலியா திணறல் ஆட்டம்...ஜெயிக்குமா ஆப்கானிஸ்தான்?

Afganisthan -Australia
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே போட்டி  மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி  அபாரமாக விளையாடி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்  இப்ராஹிம் 129 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து, பேட்டிங் செய்து வரும் ஆஸ்ர்திரேலியா அணி தொடக்கத்தில் 4 விக்கெட்டுகள் பறிகொடுத்தது.

குறிப்பாக வார்னர் 18 ரன்னும், ஹெட் 0 ரன்னும், மார்ஸ் 24 ரன்னும், மார்னச் 14 ரன்னும், இங்லிஸ் 0 ரன்னும் அடித்து அவுட்டாகினர்.

தற்போது, மேக்ஸ்வெல் 79 ரன்னுடனும் கன்னிஸ் 7 ரன்னுடன் விளையாடி வருகின்றனர். தற்போது 30 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 169 ரன்னுடன் விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் திறமையுடன் பேட்டிக் மற்றும் பவுலிங் செய்து வரும் ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில்  நவீன் , ஓமர்சாய், ரஷித்கான் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற வாய்ப்பிருந்தாலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற போராடும் என தெரிகிறது.