வியாழன், 12 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (08:36 IST)

சென்னை டெஸ்டடில் மூன்று ஸ்பின்னர்களோடு களம் காண்கிறதா இந்திய அணி?

இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஓய்வில் இருந்து வருகிறது. இதையடுத்து வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடர் சென்னையில் வரும் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே சென்னை வந்த இந்திய அணி வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் ஆடப்போகும் லெவன் அணி என்னவாக இருக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

சென்னை மைதானம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்தர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய மூன்று சுழலர்களுமே இடம்பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.