திங்கள், 16 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (07:48 IST)

நேற்றைய SRH vs MI போட்டியில் உடைக்கப்பட்ட சாதனைகள்!

ஐபிஎல் தொடரின் எட்டாவது போட்டி நேற்று மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில்நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது. இது ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

அதன் பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கை போராடி துரத்தினாலும் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பல சாதனைகள் தகர்க்கப்பட்டன. இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 523 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். ஒரு டி 20 போட்டியில் சேர்க்கப்பட்ட மிக அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இந்த போட்டியில் இரு அணிகளும் இணைந்து 38 சிக்ஸர்கள் விளாசி, அதிக சிக்சர் அடித்த டி 20  போட்டி என்ற சாதனையை படைத்திருக்கின்றன. இது தவிர இந்த போட்டியில் நான்கு பேட்ஸ்மேன்கள் அதிவேகமாக அரைசதம் அடித்தும் கலக்கியுள்ளனர்.