வெள்ளி, 10 அக்டோபர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 5 அக்டோபர் 2025 (08:30 IST)

ஆஸ்திரேலியாத் தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு… ஜெய்ஸ்வால் & சூர்யகுமாருக்கு வாய்ப்பு?

ஆஸ்திரேலியாத் தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு… ஜெய்ஸ்வால் & சூர்யகுமாருக்கு வாய்ப்பு?
கிரிக்கெட் விளையாடும் அணிகளில் மிகவும் பிஸியான அணியாக உள்ளது இந்தியா. கிட்டத்தட்ட மூன்று வடிவங்களுக்கும் தனித்தனியாக அணியே இந்தியாவிடம் உள்ளது. அதனால் தொடர்ச்சியாக போட்டிகளை விளையாடி வருகிறது. கடந்த வாரம் டி 20 வடிவில் ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாடி வெற்றி பெற்ற இந்தியா, தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதையடுத்து அக்டோபர் 19 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான அணி இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் மீண்டும் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.

மேலும் தொடர்ச்சியாக விளையாடி வரும் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வளிக்கப்படும் எனத் தெரிகிறது. ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்த தொடரில் வாய்ப்புப் பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது.