திங்கள், 16 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 12 அக்டோபர் 2023 (14:21 IST)

தன் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மாவை வாழ்த்திய கிறிஸ் கெய்ல்!

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த உலகக் கோப்பை போட்டியில் 63 பந்துகளில் சதமடித்து அசத்தினார். உலகக் கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை கபில் தேவ்விடம் இருந்து பெற்றுள்ளார்.

நேற்றைய போட்டியில் அவர் 5 சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை அவர் படைத்துள்ளார். முதலிடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்லை அவர் முந்தியுள்ளார். தற்போது விளையாடும் வீரர்கள் ரோஹித் ஷர்மாவுக்கு அருகில் கூட எந்த வீரரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தன்னுடைய சாதனையை முறியடித்துள்ள ரோஹித் ஷர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கிறிஸ் கெய்ல் “வாழ்த்துகள் ரோஹித் ஷர்மா. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள். #45 ஸ்பெஷல்” எனக் கூறியுள்ளார். அவருக்கு பதிலளித்த ரோஹித் “நன்றி கெய்ல். நம் இருவருக்கும் பின்பும் 45 என்ற எண்கள் இருந்தாலும் நமக்கு பிடித்தது 6தான்” எனக் கூறியுள்ளார்.