வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 8 ஜூலை 2025 (11:55 IST)

RCB வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார்… போலீஸார் வழக்குப் பதிவு!

RCB வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார்… போலீஸார் வழக்குப் பதிவு!
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இடது கை வேகப் பந்துவீச்சாளரான யாஷ் தயாள் ஐபிஎல் தொடர் மூலம் கவனம் ஈர்த்து இந்திய அணிக்குத் தேர்வானார். முதலில் குஜராத் அணிக்காக விளையாடிய அவர், அதன் பின்னர் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வரும் அவர் இந்த ஆண்டு ஆர் சி பி அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருந்தார். இந்நிலையில் அவர் மேல் ஒரு பெண் பாலியல் புகார் சுமத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து தன்னைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் இப்போது திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என்று சம்மந்தப்பட்ட பெண் புகாரளிக்க, காவல்துறையினர் இப்போது யாஷ் மீது பிரிவு 69-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.