வியாழன், 12 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2024 (09:01 IST)

ரன் மெஷினுக்கு என்னதான் ஆச்சு?... 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலையில் கோலி!

ஒவ்வொரு தசாப்தத்திலும் ஒரு வீரர் கிரிக்கெட்டின் முகமாக  இருப்பார். முந்தைய தலைமுறையில் இருந்து கிரிக்கெட்டின் முகம் இன்னொரு வீரருக்கு மாறும். அப்படி சச்சின் மற்றும் தோனிக்குப் பிறகு உச்சப் புகழோடு உலகளவில் ரசிகர்களைப் பெற்று இருக்கிறார் கோலி. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிக சாதனைகளைப் படைத்த வீரராக கோலி இருக்கிறார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகள் அவருக்கு சிறப்பான ஆண்டுகளாக அமையவில்லை. தன்னுடைய மோசமான ஃபார்மில் இருந்து திரும்பி கோலி கடந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் 2024 ஆம் ஆண்டு மீண்டும் அவருக்கு ஒரு சோகமான ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 25 ரன்கள்தான் சேர்த்து வருகிறார். விரைவில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள நிலையில் கோலியின் ஃபார்ம் கவலையளிக்கிறது.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோலியின் ஐசிசி டெஸ்ட் தரவரிசை படுபாதாளத்துக்கு சென்றுள்ளது. அவர் முதல் முறையாக 20 இடங்களுக்கு மேல் தள்ளப்பட்டுள்ளார். அவர் ஐசிசி தரவரிசையில் தற்போது 22 ஆவது இடத்தில் உள்ளார்.