1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 9 மே 2025 (08:44 IST)

பதற்றமான சூழல். ஐபிஎல் தொடரைத் தள்ளிவைக்க பிசிசிஐ ஆலோசனை!

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய முப்படை பாகிஸ்தானின் 9 இடங்களில் குறிவைத்துத் தாக்கியது. தீவிரவாதிகள் முகாமைதான் தாக்கினோம் என்று இந்தியா சார்பில் சொல்லப்பட்டாலும், மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டை வைத்தது.

இதையடுத்து பாகிஸ்தான் இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்த, இந்தியாவும் பதிலடித் தாக்குதல் நடத்துகிறது. இதன் காரணமாக இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் உள்ளது. இதன் காரணமாக நேற்று இமாச்சலின் தரம்ஷாலா மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

மேலும் ஐபிஎல் தொடரையேத் தள்ளிவைக்கலாமா என பிசிசிஐ இன்று அவசர ஆலோசனை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக சொல்லப்படுகிறது.