திங்கள், 16 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 11 நவம்பர் 2024 (10:37 IST)

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கு ரோஹித் சர்மா வரவில்லை என்றால் வேறு வீரர்கள் விளையாடுவார்கள் என அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார்.

 

 

இந்திய அணி நியூசிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணிலேயே வொயிட் வாஷ் ஆன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பார்டர்-கவாஸ்கர் தொடரில் பங்கேற்க இந்திய அணி ஆஸ்திரேலியா செல்ல உள்ளது.

 

இதற்கான வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா பெயர் இருந்தாலும் அவர் ஆஸ்திரேலியா செல்லப்போவதில்லை என தகவல்கள் வெளியாகி வருகிறது. அவரது மனைவியின் பிரசவ தேதியும், டெஸ்ட் தொடரை நெருங்கி வருவதால் அவர் ஆஸ்திரேலியா செல்வதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.
 

 

இந்நிலையில் ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா என்பது குறித்து பேசிய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்காத பட்சத்தில் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் அல்லது அபிமன்யூ ஈஸ்வரன் களம் இறங்குவார்கள். துணை கேப்டனாக உள்ள பும்ரா கேப்டனாக செயல்படுவார்” எனக் கூறியுள்ளார்.

 

அவர் முதல் டெஸ்ட் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளதால் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K