வியாழன், 12 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 12 நவம்பர் 2024 (10:25 IST)

சி எஸ் கே அணி என்னை எடுக்கும் என்று நம்புகிறேன்… வெளிப்படையாகக் கேட்ட தீபக் சஹார்!

ஐபிஎல் தொடரில் அடுத்த சீசனில் அணிகள் புணரமைக்கப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் அதிகபட்சம் ஐந்து வீரர்கள் வரை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். மற்ற வீரர்களை எடுப்பதற்கான மெஹா ஏலம் அடுத்த மாதம் நடக்கவுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ஜடேஜா, ருத்துராஜ் கெய்க்வாட், மதீஷ பதிரனா மற்றும் ஷிவம் துபே ஆகியோரை மட்டும் தக்கவைத்துள்ளது. ஏலத்தில் அணியைக் கட்டமைக்க எந்தந்த வீரர்களை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் சி எஸ் கே அணியின் முன்னாள் வீரரான தீபக் சஹார் “சென்னை அணி என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என்று நம்புகிறேன். கடைசியாக நடந்த மெஹா ஏலத்திலும் சிஎஸ்கே அணி என்னைத் தக்கவைக்கவில்லை. ஆனால் பல முயற்சிகளை செய்து என்னைத் தக்கவைத்தார்கள். இம்முறை என்ன நடக்கப் போகிறது எனத் தெரியவில்லை. என் திறமைக்குத் தகுதியான ஊதியம் கிடைக்கும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.