திங்கள், 16 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 27 மார்ச் 2024 (15:08 IST)

இந்த ஆண்டு இறுதியில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு!

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் நடந்து வருகிறது. ஒரு ஆண்டு ஆஸ்திரேலியாவிலும் ஒரு ஆண்டு இந்தியாவிலும் என மாறி மாறி நடக்கிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள அந்த தொடருக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்த தொடரில் பகலிரவு போட்டி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

டெஸ்ட் தொடருக்கான அட்டவணை
 
  • முதல் டெஸ்ட் –நவம்பர் 22 -26 – பெர்த்
  • இரண்டாவது டெஸ்ட் – டிசம்பர் 6- 10- அடிலெய்ட்
  • மூன்றாவது டெஸ்ட் – டிசம்பர் 14-18 – பிரிஸ்பேன்
  • நான்காவது டெஸ்ட் – டிசம்பர் 26-30 – மெல்போர்ன்
  • ஐந்தாவது டெஸ்ட் – ஜனவரி 3-7  - சிட்னி