வெள்ளி, 10 அக்டோபர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 2 அக்டோபர் 2025 (06:01 IST)

இந்த ராசிக்காரர்கள் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை! - இன்றைய ராசி பலன்கள் (02.10.2025)!

astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்
இன்று தன்னிச்சையாக முடிவு எடுப்பீர்கள். அவசரமாக எதையும் செய்ய தோன்றும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்.  சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்கபெறும். ஆனால் வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
.அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

 
ரிஷபம்
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு செயலாற்றுவது வளர்ச்சிக்கு உதவும். வாடிக்கையாளர்களிடம் சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில் வேகம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

 
மிதுனம்
இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன்  தன்மையாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  ஒற்றுமை குறைவு ஏற்படலாம். கவனம் தேவை.  பிள்ளை களுக்காக செய்யும்  வேலைகளில் தடை ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

 
கடகம்
இன்று எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் எதிர்கால கல்வி தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து  தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், மற்றவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம்
இன்று லட்சியத்தில் உறுதியாக இருப்பீர்கள். அவசரப்படுவதை தவிர்ப்பது நன்மை தரும். வீண் செலவும், அலைச்சலும் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம்  ஏற்படலாம். தேவையற்ற  குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். எனவே  எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

 
கன்னி
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான  பணிகளில் தாமதம் ஏற்படும்.  வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை. தீ, ஆயுதம் இவற்றை கையாளும் போது கவமனாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்
இன்று கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.  வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் மனகவலை  ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

 
விருச்சிகம்
இன்று மற்றவர்களுக்கு உதவி செய்யபோய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம். சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

 
தனுசு
இன்று அபார அறிவாற்றலும், ஆராய்ச்சி நோக்குடன் எதையும் பார்ப்பீர்கள். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

 
மகரம்
இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும்.  குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமணம்  தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

 
கும்பம்
இன்று குடும்ப உறுப்பினர்கள் மத்தியில்  மகிழ்ச்சி நிலவும், கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.   தொலைதூர தகவல்கள்  நல்ல தகவல்களாக வரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

 
மீனம்
இன்று மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9